NFGG இனால்,விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு.


(NFGG ஊடகப் பிரிவு அக்கரைப்பற்று)
அக்கரைப்பற்று சன்றைஸ் விளையாட்டுக் கழக B team அங்கத்தவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, இன்று 02.01.2019 புதன்கிழமை மாலை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அக்கரைப்பற்று அலுவலகத்தில் இடம்பெற்றது.
NFGG தவிசாளரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சிராஜ் மஷ்ஹூர், சன்றைஸ் விளையாட்டுக் கழக செயலாளர் எம். எச். ஜெய்னுடீன், NFGG அக்கரைப்பற்று செயற்குழு உறுப்பினரும் விளையாட்டுத் துறைப் பொறுப்பாளருமான ஓய்வு பெற்ற மாவட்ட புள்ளிவிவரவியலாளர் ஐ.எல்.ஷரிப்டீன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.