கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சாரதிக்கு விளக்கமறியல்



(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-சாந்திபுரம் பகுதியில் கேரளா கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற முற்சக்கர வண்டி சாரதியை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க கட்டளையிட்டுள்ளார். 

திருகோணமலை மொரவெவ பொலிசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முற்சக்கர வண்டி சாரதியை இன்று (11) ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை - ரொட்டவெவ பகுதியைச்சேர்ந்த நவா‌ஸ
 நஸ்லிம் (31 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரின் முற்சக்கர வண்டியை சோதனையிட்ட போது விற்பனைக்கு பொதி செய்யப்பட்ட நிலையில் கொண்டு சென்ற போது கைது செய்ததாகவும் ஏற்கனேவே திருகோணமலை நீதிமன்றத்தில் கஞ்சா போதைப் பொருள் தொடர்பில் முன் குற்றங்கள் இருப்பதாகவும் நீதவான் முன்னிலையில் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர். 

அத்துடன் மொரவெவ - ரொட்டவெவ பகுதியில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவு‌ம் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.