ஞானசாரவின் மேன் முறையீடு வழக்கு : கடூழிய சிறைத் தண்டனைக்குப் பதிலாக,ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை


ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் வழங்கப்பட்ட 01 வருட சிறைத் தண்டனையை இடைநிறுத்துவதற்கு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் 01 வருட சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் கடந்த ஜூன் 14ம் திகதி உத்தரவிட்டது. 

இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி அவருடைய வழக்கறிஞர்கள் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். 

அதன்படி மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை அறிவித்த ஹோமாகம நீதிமன்றம் இந்த தண்டனையை 05 வருடங்களுக்கு இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளது. 

2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு இடம்பெற்று வந்தது.