நீதித் துறையின் கௌரவத்தைப் பேணும் வகையில் எந்தவொரு அரசியல் குழுவுக்கும் சார்பாக செயற்படாமல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை வழிநடாத்தப் போவதாக சங்கத்தின் புதிய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று (20) நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளினால் இவர் தெரிவு செய்யப்பட்டார். இதன்பின்னர் தனது வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராக யு.ஆர்.டி. சில்வா செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment