திருமலையில், பிரதமர்



(அப்துல்சலாம் யாசீம்) 

திருகோணமலை -கன்தளாய் 98ஆம் கட்டை கல்பொகுன ரஜமகா விகாரைக்கு, இன்று (23)  பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த மத குருக்களுக்கு அண்ணதானமும் வழங்கி வைக்கப்பட்டது. 
இந்நிகழ்விற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன் திருகோணமலை மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பிலும் அப்பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களையும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் பிரதமரிடம் இதன் போது எடுத்துக் கூறியுள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்ணதான நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். 

இதன்போது பிரதமர் உரையாட்டுகையில்  "அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முடிவடைந்ததை அடுத்து திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை நன்கு அறிந்ததாகவும் அவர்களின் நலன் கருதி நெல்லை கொள்வனவு செய்வதற்கும் , உரிய விலையில் பெறப்படுகின்றதா என்பதை  கண்காணிப்பதற்காகவும் விவசாய அமைச்சரை  நியமித்துள்ளதாகவும் பிரதமர் இதன் போது தெரிவித்தார்  

இந்த வருடம் அபிவிருத்திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில் கம்பரெலிய, ஸ்ரீலங்கா எண்டபிறைசஸ் போன்ற திட்டங்களை ஆரம்பித்திருகின்றோம்"


நாட்டை அபிவிருத்தி செய்வது பற்றி ஏற்கனவே மதங்கள் தெளிவுபடுத்தியுள்ளது  இதனடிப்படையில் நாங்கள் ஆட்சி செய்வோமானால் நாட்டை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்ல முடியும் எனவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்

அத்துடன் ஜப்பான் நாட்டை எடுத்துக் கொண்டால் அங்கு எல்லோரும் ஒற்றுமையாக செயற்படுவதனால் அந்த நாடு பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளது

அதே போல் எமது நாட்டை முன்னேற்றுவதற்கு  நாமும் இன மத வேறுபாடு இன்றி செயற்பட வேண்டும் தேர்தல் காலங்களில் தமிழ் , முஸ்லிம்களின் வாக்குகளை தங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் செல்கின்றோம்  அதே போல் ஏனைய காலங்களில் நட்பு ரீதியாகவும் சமத்துவத்துடன் வாழ பழக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் ப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஃறுப் விவசாய அமைச்சர் .பீ.ஹர்சன் பாராளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமர சிங்க மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலரூம் கலந்து கொண்டனர்