பெண்களுக்கு ரயில் பெட்டிகள்



ரயில்களில், பெண்களுக்கென்று விசேட பெட்டிகளை ஒதுக்குவதற்குத் தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது என, ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம், எதிர்வரும் மார்ச் மாதம் ​கொண்டாடப்படவுள்ள நிலையில்,  அன்றைய தினத்திலிருந்து, இது நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.
இதன் முதல் கட்டமாக, ஆறு அலுவலக ​ரயில்களில், பெண்களுக்கான பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.