பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70 வது பிறந்த தினம்



பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் தனது 70ஆவது அகவையில் காலடி வைக்கின்றார். 

ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe, சிங்களம்: රනිල් වික්‍රමසිංහ, பிறப்பு: 24 மார்ச் 1949) இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமரும் ஆவார். இவர் 2015 முதல் பிரதமராகப் பதவியில் உள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994 முதலும், 1977 முதல் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும் உள்ளார்.[1]

விக்கிரமசிங்க 1993 முதல் 1994 வரையிலும், 2001 முதல் 2004 வரையிலும், 2015 முதல் 2018 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். 1994 இல் காமினி திசாநாயக்கா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2]

சனவரி, 2015ஆம் ஆண்டில் இலங்கை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தனது 100-நாள் நல்லாட்சி வேலைத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக நியமித்தார்.[3] 2015 ஆகத்தில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஆனாலும், அது அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியது. ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் செய்துகொண்ட இரண்டாண்டு உடன்படிக்கையை அடுத்து ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.[


விக்கிரமசிங்கவின் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. 113 என்ற அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், இலங்கை சுதந்திரக் கட்சியின் 35 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்ததை அடுத்தும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார். 2018 அக்டோபர் 26 இல் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி, அவருக்குப் பதிலாக முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவைப் பிரதமராக நியமித்தார். ராசபக்சவின் நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி விக்கிரமசிங்க இதனை ஏற்கவில்லை. இதனால் இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியை சந்தித்தது.[8] 2018 டிசம்பர் 16 இல் இவர் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.