கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றின் மீது எதிர்திசையில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் வேனில் பயணித்த 8 பேர் மற்றும் பாதையில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் வேனில் பயணித்த மூவரும் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment