அப்துல் றவுப் ஹக்கீம் அறிவாரா? உலக நீர் தினத்தில் நீரின்றித் தவிக்கும் அம்பாறை மாவட்ட மக்களை



#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்,  மின் வெட்டு இடம் பெறும் வேளைகளில், சொல்லாமல் கொள்ளமால் நீர் வெட்டும் ஏற்படுகின்றது. generator machine பழுதடைந்ததனால்,அதளை இயக்க முடியாதுள்ளதாக அறிவிக்கின்றனர்.இது காலங்காலமாக, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாரினால், அல்லது அதற்குப் பொறுப்பாகவுள்ள உயர் அதிகாரிகளினால் மக்களுக்குச்  சொல்லப்படும் அரைத்த மாவும்,புளித்த கதையுமாகிவிட்டது. 
பழுதடைந்த  ஏன் திருத்தவில்லை அல்லது அதற்குரிய முயற்ச்சிகள் எடுக்கபட்டதா எனக் கேட்கும் நுகர்வோரிடத்திலும், ”நீர் வழங்கல் அமைச்சரருக்கும் அறிவித்து விட்டோம் எங்களால் எதுவுமே செய்ய முடியாதென்றும“ கைவிரிக்கின்றனராம்.

இதே மின்வெட்டு, அருகிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுலில் இருக்கும் போதெல்லாம் அங்கு நீர் வெட்டு அமுலாவதில்லை என்பது கண்கூடு.

இந்த சீரழிவு பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்அறிவாரா? அவர் அறிந்திருந்தால், அவர் எடுத்த நடவடிக்கைகள் என்னவென்பது பற்றி அறிய ஆவலாக அம்பாரை மாவட்ட மக்கள் உள்ளனர்.
இதேவேளை,தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஏற்பாடு செய்திருந்த உலக நீர் தின (2019) நிகழ்வு இன்று (22), கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.