சிரேஸ்ட பத்திரிகையாளர் பைரூஸ் காலமானார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் தினகரன் சிரேஷ்ட ஊடகவியலாளரும் மூத்த எழுத்தாளருமான அல்ஹாஜ் எப். எம். பைரூஸ் (வயது 67) இன்று (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அவரது ஜனாஸா இல. 35 / 10ஏ ஹாஜி பாத்திமா கார்டன் மாக்கொல இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஜனாஸா நல்லடக்கம் மாக்கொல இல்லத்திலிருந்து இன்று பிற்பகல் 5.00 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு இன்ஷா அல்லாஹ் இன்று (14) மஃரிப் தொழுகையை தொடர்ந்து குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.


--- Advertisment ---