பிரதான வீதி மக்கள் பாவனைக்கு


(க.கிஷாந்தன்)
அட்டன் செனன் வெலிஓயா தோட்டத்தின் ஊடாக வட்டவளை நகருக்குச் செல்லும் 9.28 கிலோ மீற்றர் பாதை 32 கோடி ரூபா செலவில் “கார்பெட் போடப்பட்டு 21.07.2019 அன்று மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் ஐ.தே.க. தவிசாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாசிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அவரோடு நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் எம். உதயகுமார், சோ. ஸ்ரீதரன், எம். ராம், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகதர்கள், பொதுமக்கள்  பலரும் கலந்து கொண்டார்கள்.
அதிதிகள் வரவேற்கப்பட்டு பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து பாதை திறந்து வைப்படுவதையும் அவர்கள் உரையாற்றுவதையும், படங்களில் காணலாம்.