மட்டக்களப்பு விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு மாற்றும் எண்ணெம் ஈடேறுகின்றது


#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இதுவரைக் காலமும் உள்நாட்டு விமான சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச தரத்துக்கு ஏற்ற வகையில் சேவை வழங்குவதற்கான,  முதற்கட்ட நகர்வு நாளை இடம்பெறவுள்ளதாக தெரிய வருகின்றது. இதனைக் குறிக்கும் முகமாக நாளை விசேட நிகழ்வு நண்பகல் 12 மணிக்கு அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இதற்கென விசேட விமானம் மூலம் நாளைய தினம் அமைச்சர்கள் வந்து மட்டக்களப்பில் வந்திறங்கவுள்ளனர். அவர்களின் வருகையின் நோக்கம் மட்டக்களப்பு விமானத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான சாத்திய வள ஏற்பாடுகளை ஆராய்வதற்காகவாகும்.
இவ்வாண்டின் இறுதியளவில், சென்னைக்கும் ம்ட்டக்களப்புக்குமான சேவை ஆரம்பிக்கப்படுவதற்கான கள விஜயமாக இது அமையப் பெறவுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பொன்சேகா தெவித்துள்ளார்.


--- Advertisment ---