வியாழேந்திரன் எம்.பி இற்கும் அழைப்பாணை

மட்டக்களப்பில் நேற்றிரவு இடம் பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில், ஆஜராகுமாறு, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட 5 பேரை வெள்ளிக் கிழமை 31ந் திகதி மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(முந்தைய செய்தி)

#மட்டக்களப்பு – கல்வியங்காடு இந்து மயானத்தில் ஈஸ்டர் குண்டுதாரி ஒருவரின் உடற்பாங்கள் புதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதி மக்கள் தற்போது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.பொலிசார் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நீர்த்தாரைப் பிரயோகk; மேற்கொண்டும் வருகின்றனர்.

கொழும்பு#மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்துள்ள போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால், குறித்த பகுதியில் தற்போது போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Advertisement