விழிப்பூட்டல்

பாறுக் ஷிஹான்  

தொற்றா நோய் தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களை விழிப்பூட்டல் செய்யும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இந்நிகழ்வு  திங்கட்கிழமை (27) காலை ஆரம்பமானதுடன் நாவிதன்வெளி பிரதேச பிராந்திய வைத்திய அதிகாரி ஜே.மதன் விளக்கமளித்தார்.

 விழிப்பூட்டல் நிகழ்வினை நாவிதன்வெளி பிரதேச செயலகம்  ,நாவிதன்வெளி பிராந்திய வைத்திய பணிமனை ,உலக தரிசன அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதில்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு   தொற்றா நோய்கள் தொடர்பாக விளக்கங்கள்,உடற்திணிவுச் சுட்டி, போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொண்டனர்.


--- Advertisment ---