திறப்புவிழா

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஆரம்பப்பிரிவு  விபத்து  அவசர சிகிச்சை பிரிவின் திறப்புவிழா  வியாழக்கிழமை(29)  காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம்  அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இணைந்து குறித்த கட்டடத்தை திறந்து வைத்ததுடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள்   வைத்தியர்கள்   தாதியர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர்களும் கலந்து கொண்டனர்.

 அங்கு  சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவிக்கையில்

மகிந்த ராஜபக்ஷ இருந்திருந்தால் கல்முனையில் உண்ணாவிரதம் இருந்திருக்க முடியாது .ஆளுந்தரப்பில் இல்லாத எதிர் தரப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் முன்னைய மஹிந்த  ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வீதியில் இறங்கி உண்ணாவிரதம் சத்தியாக்கிரகம் இன்று இருந்திருந்தால் இரவோடு இரவாக வெள்ளை வேனில் ஏற்றிச் செல்லப்பட்டு இருப்பார் .இவ்வாறான சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் தமது ஆட்சிக் காலத்தில்தான் வழங்கியிருந்தோம். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மௌனிகளாக இருந்திருக்க வேண்டும்.

வடக்கில் 39 ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தி வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.ஆனால் இன்று ஊடகவியலாளர்களுக்கான பூரண சுதந்திரத்தை நாம் வழங்கியுளள்ளோம்.

நாங்கள் எங்களது வாகனத்தில் வீதியில் சென்றாலும் வாகனம் சென்ற வேகத்தில் ஏற்படுகின்ற காற்றில் ஊடகவியலாளர்களின் தலைமுடி கூட அசையாத வண்ணம் நடந்து கொள்கின்றோம்.
ஆனால் இந்த ஊடகவியலாளர்கள் என்று எங்களுக்கு எதிராக கோஷம் செய்கின்றனர் பழி சுமத்துகின்றனர்.

ஊடகங்கள் மீது தீ மூட்டப்பட்டது எந்த ஆட்சிக் காலத்தில் இதை நான் கூற வேண்டிய அவசியம் இல்லை வெற்றியெல்லாம் சுத்தம் செய்வதற்காக தான் எங்களுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   பிரதமர் இணைந்து இந்த ஆட்சிக்காலத்தில் ஜனநாயகத்தை முற்றுமுழுதாக கொண்டு செல்கின்றனர். எங்களுடைய ஆட்சிக்காலத்தில்தான் உரிமை ஜனநாயகம் என்பதை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

எங்களுடைய ஆட்சியானது பூரணமான ஆட்சி என்று எங்களால் கூற முடியாது ஆனால் மஹிந்தவின் ஆட்சியை விட சிறந்த ஆட்சி என்பதை உறுதியாக கூற முடியும் என்பதை இந்த இடத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

தமிழர்கள் தங்களது சமய அனுஷ்டானங்களை செய்வதற்கும் முஸ்லிம்கள் தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அனுஷ்டானங்களில் ஈடுபட்டிருக்கும் எந்தவித தடைகளும் எங்களால் விதிக்கப்படவில்லை.

அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டு சமத்துவமான வாழ்வதற்காக எங்களது ஆட்சியாக கொண்டு செல்கின்றோம் நீங்கள்  வழங்கிய 5வருட ஆட்சிக்காலத்தில் எங்களால் இயலுமான வகையில் நாட்டை கட்டியெப்பியுள்ளோம்  இன்னும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது அதனால் தான் மக்களாகிய உங்களிடம் மீண்டும் ஒருமுறை எங்கள் ஆட்சியை அமைப்பதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை வேண்டிநிற்கின்றோம்  என கேட்டுள்ளார்.


Advertisement