அருண்ஜெட்லியால் பா.ஜனதாவில் சேர்ந்தேன்

ஆக்ரா:

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அருண்ஜெட்லி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். நேற்று அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது

அருண்ஜெட்லி குறித்து பா.ஜனதா எம்.பி.யும், பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி கூறியதாவது:-

நான் அரசியலில் நுழைவதற்கு அருண்ஜெட்லி தான் காரணமாக இருந்தார். அவர் என்னை ஊக்குவித்ததால் பா.ஜனதாவில் சேரும் முடிவை எடுத்தேன். அவரால் தான் அந்த கட்சியில் சேர்ந்தேன்.

பாஜக

அருண்ஜெட்லி எப்போதுமே என்னை ஊக்கப்படுத்துவார். பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு ஆதரவாக இருந்தார்.

அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பாகும். அவர் நிதி மந்திரி பதவியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவரது மரணம் துரதிருஷ்டவசமானது. அனுபவம் வாய்ந்த ஒருவரை நாடு இழந்து விட்டது.

ஏற்கனவே எனக்கு நெருக்கமான சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்தார். தற்போது அருண்ஜெட்லியும் மரணம் அடைந்துள்ளார். இருவரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :Advertisement