டொயோட்டோ கார் விற்பனையகத்தின் இணை இயக்குனர்,தற்கொலை

சென்னையில் டொயோட்டோ கார் விற்பனையகத்தின் இணை இயக்குனர், தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கான காரணங்கள் குறித்து காவல்துறை விசாரித்துவருகிறது.

சென்னையில் லான்சன் டொயோட்டோ என்ற பெயரில் மிகப் பெரிய கார் விற்பனையகத்தை நடத்தி வருபவர் லங்கா லிங்கம். இவரது மனைவி ரீட்டா. இவர் லான்சன் டொயோட்டோவின் இணை இயக்குனராக செயல்பட்டுவந்தார்.

சென்னை கோத்தாரி சாலையில் அவர்களது இல்லம் அமைந்துள்ளது. வியாழக்கிழமையன்று அவரது வீட்டில் பணியாற்றும் ஏசுபாதம் என்பவர் இன்று காலையில் லங்கா லிங்கம் வீட்டிற்குச் சென்றபோது, ரீட்டா அவரது அறையில் தூக்கிலிட்டு தொங்கியபடி இருந்தார்.

அவரது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது


--- Advertisment ---