கோட்டாபய வழக்கு :நீதிமன்றில் கரகோசம் செய்த சட்டத்தரணிகளுக்கு எதிராக சட்டப் பாய்ச்சல்

#IsmailUvaizurRahman.
கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பான தீர்ப்பு, நேற்றைய தினம் மேன் முறையீட்டு நீதிமன்றில் வாசிக்கப்பட்ட வேளை, SLPP இற்கு ஆதரவான சட்த்தரணிகள்  சிலர் திறந்த நீதிமன்றில் தங்கள் கைகளைத் தட்டி கரகோசம் செய்து ஆர்ப்பரித்துள்ளனர்.

இதனால் அதிருப்தியுற்ற மேன்முறையீட்டுமன்ற தவிசாளர்,நீதிபதி யசந்த கோதாகொட இவர்களை எச்சரித்தள்ளார். மேலும், இத்தகைய சட்டத்தரணிகள் மீது, சட்டத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.உடனடியாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி. சில்வா மன்னிப்புக் கோரியுமுள்ளார்.--- Advertisment ---