டக்ளஸ், அதாவுல்லாவும் பங்கேற்புடன் கேக் வெட்டிக் கொண்டாடிய மஹிந்த அணி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று மாலை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து பல இடங்களிலும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
அந்தவகையில் கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினர். இதில் ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


--- Advertisment ---