பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை

(க.கிஷாந்தன்)
புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 14.10.2019 அன்று பண்டாரவளை நகரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
பண்டாரவளையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 14.10.2019 அன்று காலை பதுளை மாவட்ட வர்த்தக சங்கத்தினருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பதுளை, பண்டாரவளை, ஹாலிஎல, எல்ல, தியதலாவ, ஹப்புத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது நகரங்களில் உள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
வர்த்தகர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள், மற்றும் யோசனைகளை கேட்டறிந்துக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இதனை எதிர்வரும் மாதம் 16ம் திகதிக்கு பிறகு நான் ஜனாதிபதியாக வெற்றிப்பெற்றால் நிச்சயமாக இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வேன் என இதன்போது உறுதியளித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், தொழிற்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.