சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலையில்

(க.கிஷாந்தன்)
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணி 10.11.2019 அன்று தலவாக்கலை நகர சபை மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

 பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதித் தலைவர்கள் அமைச்சர் பி. திகாம்பரம், அமைச்சர் வீ இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். திலகராஜ், ஏ.. அரவிந்தகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணி பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், மத்திய மாகா சபை முன்னாள் உறுப்பினர்கள், எம். உதயகுமார், சோ. ஸ்ரீதரன், எம். ராம், சரஸ்வதி சிவகுரு, ஆர். ராஜாராம் “ட்ரஸ்ட்” நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டதோடு, நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த அற்புதராஜ், இ.தொ.கா. வைச் சேர்ந்த ஜெசிந்தா, என்டன் ஆகிய மூவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியோடு இணைந்து கொண்டார்கள்.