இறுதித்தீர்ப்பு, அயோத்தி வழக்கில்

ராமஜென்ம பூமி என்று பரவலாக அறியப்படும் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பை நாளை(சனிக்கிழமை) உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ளது.
நாளை காலை 10:30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும்.
அயோத்தி நிலப் பிரச்சனையை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

பாபர் மசூதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை அக்டோபர் 18ம் தேதி புதன்கிழமை முடிவடைந்தது. மற்ற வாதங்களை அடுத்த மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, 40 நாட்கள் விசாரணைக்கு பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.இதுவே இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் விசாரணை நடைபெற்ற இரண்டாவது பெரிய வழக்காகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேசவானந்தா பாரதி வழக்கு 68 நாட்கள் நடைபெற்றது. ஆதார் கார்டு தொடர்பான வழக்கு மூன்றாவது நீளமான வழக்காகும். அது 38 நாட்கள் நடைபெற்றது.யார் யார் இந்த அரசியல் சாசன அமர்வில் இருக்கிறார்கள்? இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஷரத் அர்விந்த் பாப்டே, அஷோக் பூஷன், சந்திரசூட் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர்தான் விசாரித்தனர்.
அயோத்தி நிலத்தகராறு வழக்கு நாளை சனிக்கிழமை முதலாவதாக எடுத்துகொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

இந்த ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, தினமும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதற்கு முன்னதாக ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவால் இதனை முடித்து வைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தை ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோஹி அக்காரா ஆகிய மூன்று தரப்பினரும் சரிசரமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று செப்டம்பர் 30, 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது . இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கைதான் உச்சநீதிமன்றம் விசாரித்தது.