கதையல்ல,இது நிஜம்



Pirasanna Karaitivu
இவ் வருடத்தை சிறப்பிக்கும் இருவர்.(இன்னும் பலர் இணையலாம்)
விரும்பினால் வாசியுங்கள் உங்கள் பிள்ளைகளையும் ஊக்குவியுங்கள்.
#கல்வி_கற்க_வறுமைதடையல்ல
#கல்வி_கற்க_விளையாட்டு_தடையல்ல
#கதை_01
தற்பொழுது பரவலாக பேசப்படும் விடயம் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி. Musathika..
இதனை தாண்டி ஒரு விடயம் நாம் அனைவரும் அறிந்ததே ஆகவேண்டும்..
இவரது வாழ்க்கையின் பின்புலம்..மிகவும் கஷ்டமான அதாவது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நிலை..
இவரது தந்தை ஒரு கல் உற்பத்தி செய்யும் தொழிலாளி..
தனது வாழ்க்கையை முழுவதுமாக தனது பிள்ளைகளுக்காக அர்ப்பணித்தவர்.. இவரோடு பேசும்போது அவர் கூறிய வார்த்தைகள் எம் அனைவருக்கும் கண் கலங்க வைக்கும் அளவிற்கு கஷ்டம் நிறைந்த மன வரிகள் அவை..
அதாவது எனது வாழ்க்கை மண்ணும் நெருப்பும் தான் இவ்வளவு காலமும் என்றார்...
இவை அனைத்தும் கருத்தில் எடுக்காமல் தனது மகளின் லட்சியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக முழுவதுமாக உழைத்தவர்..
#கதை_02
உயிரியல் துறையில் 3A பெற்ற சாவகச்சேரி இந்து மாணவியின் அசாத்தியத் திறமைகள்!! 
விளையாட்டுத்துறையிலும் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் பிரகாசித்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி சந்திரசேகரம் சங்கவி, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியலில் 3 ஏ சித்தியைப் பெற்று சாதித்துள்ளார்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்க ஆரம்பித்த மாணவி சந்திரசேகரம் சங்கவி, 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6ஆவது இடத்தைப் பெற்றார்.
தொடர்ந்து 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்தார்.
விளையாட்டு ஒருபோதும் கல்விக்கு தடையாக இருந்தில்லை தனது 16ஆவது வயதில் தெரிவித்திருந்த சங்கவி, அதனை க.பொ.த. உயர்தரப் பரீட்சையிலும் சாதித்துக் காட்டியுள்ளார்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 2018 – 2019 கல்வி ஆண்டில் மாணவர் தலைவியாகவிருந்த மாணவி சந்திரசேகரம் சங்கவி, விளையாட்டுத் துறையில் தேசிய மட்டத்தில் தங்கம், வெள்ளி, வெண்கலம் எனப் பெற்று கல்லூரிக்கும் வடக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்தவர்.
2016ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப்பதக்கம் வென்றெடுத்தர். அதே ஆண்டு நடைபெற்ற ஜூனியர் தேசிய விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
2017ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் 17 வயதுப் பிரிவினருக்கான ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் பெற்றார். அதே ஆண்டு நடைபெற்ற ஜூனியர் தேசிய விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கமும் தட்டெறிதலில் வெண்கலப் பதக்கமும் பெற்று வடக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்த்தார்.
2018,2019ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
இவற்றுக்கு மேலாக சதுரங்கத்திலும் பிரகாசித்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் எல்லே அணியில் 2016, 2017ஆம் ஆண்டுகளில் பங்கேற்று அணியின் மாகாண மட்டச் சம்பியனாகுவதில் பங்காற்றினார்.
மேலும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண மட்ட வணிக கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பாடத்தில் தோற்றியிருந்த மாணவி சந்திரசேகரம் சங்கவி, 3ஏ சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 15ஆவது இடத்தையும் தேசிய மட்டத்தில் 107ஆவது இடத்தையும் பெற்றார்.
“எனது அப்பா விவசாயி. 5 பெண் சகோதரங்களுக்கு இளையவரான நான், உயிரியல் பாடத்தை விருப்பமாகக் கற்றுக்கொண்டேன். எனக்கு இந்தப் பெறுபேறு கிடைப்பதற்கு பாடசாலை ஆசிரியர்களின் கற்பித்தலே காரணம். பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு என்றென்றும் நன்றியுடையவளாக இருப்பேன்.