இலங்கையை வீழ்த்தியது,பாகிஸ்தான்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 1 க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. 
இந்த போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 191 ஓட்டங்களையும், இலங்கை அணி 271 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது. 
இதனை அடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 555 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டு 476 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 
இதனை அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. 
இதன் அடிப்படையில், பாகிஸ்தான் அணி 263 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 
இதேவேளை, ஆட்ட நாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் அபிட் அலி (Abid Ali) சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 


Advertisement