யானை தாக்கி உயிர்நீத்த பொத்துவில் ஊழியரின் ஜனாசா நல்லடக்கம் இன்று




பொத்துவில் பிரதேச சபைக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் இடத்தில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

பொத்துவில் பிரதேச சபையின் ஆத்திமுனை பகுதியில் உள்ள குப்பை சேகரிக்கும் இடத்தில் காவலாளியாக கடமையாற்றி சமீம் என்பவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவரது ஜனசா நல்லடக்கம் இன்று இரவு 9 மணிக்கு பொத்துவிலில் இடம்பெறும்.