முதலீட்டு ஊக்குவிப்பு வலயத் தொழிற்சாலைகளை மூடுமாறு அரசு கட்டனையிட்டதால், அங்கு பணி புரியும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள், தமது அவசியதான பொருட்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு, தமது ஏனைய பொருட்கைள தமது பொருட்களை தங்குமிடங்களில், விட்டுச் சென்றுஅவஸ்தையுடன் வெளியேறுகின்றனர். இதேவேளை, இவர்கள் தமது தங்குமிடங்களில், விட்டுச் செல்லும் ஏனைய பொருட்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று தொழிலாளிகளில் தங்குமிடச் சொந்தக் காரர்கள் தெரிவிக்கின்றார்கள்.
தமது உதிரத்தை நாட்டின் பொருளாதாரத்திற்கு அள்ளி வழங்கும் தொழிலாளர்களின் நிர்க்கதி நிலை இது.
FTZ தொழிலாளிகள் காய்ச்சல் சோதனையோடு மாத்திரம் தமது வீடுகளுக்கு அண்மிய பொலீஸ் நிலையங்களில் இறக்கி விடப்படுவுளார்கள். இவர்களிடம் கிராமங்களில் கொரோனாவைக் கொண்டு வருவதாக ஊராரால் ஒதுக்கி வைக்கப்படுவோம் என்ற பயம் இருக்கிறது. தங்கள் பொருட்களையோ, வாகனங்களையோ எடுத்துச் செல்ல அனுமதியில்லை
Post a Comment
Post a Comment