(க.கிஷாந்தன்)
உலக குளுக்கோமா தினத்தை முன்னிட்டு இலங்கை கண் வைத்திய நிபுணர்களின் அனுசரணையுடன், டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவின் ஏற்பாட்டில் அட்டன் நகரில் 06.03.2020 அன்று விழிப்புணர்வு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர்கள், ஊழியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியவண்ணம் அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து அட்டன் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணியாக சென்றனர்.
கண்களில் ஏற்படக் கூடிய ஒரு குறைபாடே குளுக்கோமா ஆகும். இதனால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாகவே இந்த விசேட விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்ததாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவுக்கான நிபுணர் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment