புனானைையை, கொரானோ இடமாகப் பிரயோகிக்க முடியாது



கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை பரிசோதிக்கும் இடமாக புனானை பிரதேசத்தினை பயன்பாடுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
-சர்வமத தலைவர்கள் மற்றும் பிரதேச புத்திஜீவிகள் கண்டனம்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களை பரிசோதிக்கும் நிலையமாக புனானை பெட்டிக்கலோ கெம்பஸ்யினை பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் இதனால் பொது மக்கள் அடைந்து கொள்ளும் அபாய நிலை தொடர்பான அவசர கலந்துரைடயால் ஒன்று பிரதேச பள்ளிவாயல்களின் வேண்டுகோளுக்கிணங்க கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபையின் கௌரவ தவிசாளர் ஐ.டீ அஸ்மி அவர்களின் தலைமையில் சர்வமத தலைவர்களினதும், வைத்தியத்துறை நிபுனர்கள் மற்றும் பிரதேச புத்தி ஜீவிகளினதும் பங்குபற்றுதலுடன் ஓட்டமாவடி பிரதேசசபையில் நேற்று (09) திங்கட் கிழமை இடம்பெற்றது.

30 வருட யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினால் அதிகளவு பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் மக்கள் அதிகம் வழும் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. தற்பொழுது உலகையே உலுக்கும் உயிர் கொள்ளி தொற்று நோயான கொரோனா வைரஸ் காணப்படுகின்றது. வளர்ச்சி அடைந்த நாடுகளே இவ்வைரஸினை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பொருhளராதார நிலையிலும், மருத்துவ வசதியிலும், வாழ்க்கைத் தரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையல் காணப்படும் மட்டக்களப்பு பிரதேசத்தில் அதிலும் குறிப்பாக மக்கள் சனத்தொகை அதிகமாக காணப்படும் புனானை போன்ற பிரதேசங்களில் மிகவும் அபாய கரமான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களை தடுத்து வைத்து பரிசோதிப்பது என்பது மிகவும் அபாயகராமான செயற்பாடு ஆகும்.

குறித்த விடயம் தொடர்பாக சர்வமத தலைவர்கள், வைத்தியத்துறை நிபுனர்கள், பிரதேச புத்தி ஜீவிகளின் ஆலோசனைகள்; மற்றும் கருத்துக்கள் கேட்டறியப்பட்துடன் பின்வரும் தீர்மானங்கள் எட்டப்பட்டன.

1. உரிய திணைக்களங்களுக்கு தங்களது எதிர்ப்பினையும், குறித்த செயற்பாட்டினால் ஏற்படவிருக்கும் ஆபத்துகள் கடிதங்கள் மூலமும், அறிக்கைகள் மூலம் தெரியப்படுத்தி குறித்த தடுப்பு நிலையத்தினை வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றம் மேற்கொள்ள கோருதல்.

2. உடனடியாக உரிய திணைக்களங்களுக்கு தற்போதைய நிலைமை மற்றும் குறித்த இடம் தொற்று நோயாளர்களை தடுத்து வைப்பதற்கு பொருத்தமற்றது என்பதை தெரியப்படுத்துவதற்காக சர்வமதத் தலைவர்கள், பிரதேச புத்தி ஜீவிகளை கொண்ட குழு ஒன்று உடனடியாக தெரிவு செய்யப்பட்டு அக்குழு நேரடியாக சென்று தெரியப்படுத்துதல்.

3. மேற்குறித்த தீர்மானங்களுக்கமைய உரிய தீர்வுகள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் சர்வமதத் தலைவர்களின் தலைமையில் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் ஜனநாயக முறைப்படி தங்களது எதிர்பினை வெளிக்காட்டும் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.