ஒரு தேசத்துரோகியின் மரணம்



#Seevagan Poopalaratnam.
சமான் வகாராச்சி காலமானார். இலங்கையைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். இருவரும் செய்தியாளர்கள் என்பதைத்தவிர எனக்கும் அவருக்கும் இன்னுமொரு தொடர்பு உள்ளது.
இருவரும் யாராலோ இலங்கையில் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்.
நான்(சீவகன் பூபாலரட்ணம்), சமான் வகாராச்சி, சிவராம்(தராக்கி), றோய் டினேஸ் ஆகிய நால்வரும் 2000ஆம் ஆண்டில் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட, அரச ஊடகங்கள் அதனை அறிவித்தன.
தராக்கி கொலைசெய்யப்பட்டார். நாங்கள் ஏனையோர் நாடுகடந்தோம். காலம் தன்பாட்டுக்கு ஓடியது.
இன்று சமான் வகாராச்சி காலமானதாக கொழும்பில் இருந்து செய்தி வந்திருக்கிறது.
சென்று வா நண்பனே! மீண்டும் அந்த அழகிய தீவில் ஒரு இனிய நாளில் சந்திப்போம். அப்போது சமாதானமும் சுபீட்சமும் அங்கு நிலவட்டும்