பிரிட்டனில் 10,000-ஐ எட்டிய உயிரிழப்பு

கொரோனா வைரஸ்: பிரிட்டனில் 10,000-ஐ எட்டிய உயிரிழப்பு - உலக அளவில் அண்மைய செய்திகள் என்ன?
உலகை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரிட்டனில் மேலும் 737 பேர் இறந்துள்ளதையடுத்து, அங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக பிரிட்டன் இருக்கும் என அந்நாட்டின் அரசின் மூத்த அறிவியல் ஆலோசகர்களில் ஒருவர் அண்மையில் கருத்து வெளியிட்டார்
இந்நிலையில்,பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது என்ற செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,14,000-ஐ கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 5 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது..Advertisement