நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும் best of young சனசமூக நிலையமானது கடந்த காலங்களில் பல்வேறு விதமான சமூக சேவைகளை மேற்கொண்டு இருந்தது. அந்த வகையில் மாணவர்களின் மகிமை எனும் தோணிப்பொருளின் கீழ் கா.போ.த. சாதாரண தர பரீட்சையிலே சிறந்த பெறுபேறுகளை பெற்ற மணவர்களை கௌரவிக்கும் முகமாக திங்கட்கிழமை (4) நினைவுச்சின்னமும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எஸ்.புவேந்திரன் நிந்தவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரிபுதீன் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் புதல்வர் ஆஷிக் பைசல் மற்றும் சனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் அனைவரும் இணைந்து முதற்கட்டமாக மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவித்தனர்.


Post a Comment
Post a Comment