அக்கரைப்பற்று பொலிசாரிம் பொதுமக்களின் வேண்டுதல்!

SM.Irsaath.

   அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று மாநகரசபைக்குட்பட்ட அரசையடி மற்றும் அதனை அன்டிய பகுதிகளின் அண்மைக்காலங்களாக இரவுவேளைகளில் சிறு சிறு களவுகள் இடம்பெற்று வருகின்றன வீடுகள் உடைக்கப்பட்டு நகைகள் லெப்டெப்கள் சைகிள்கள் திருடப்பட்டுள்ளன மேலும் சிறு மளிகைக் கடைகள் உடைகப்பட்டு பொருட்கள் பணங்கள் என்பன திருடப்படுகின்றன 
இதற்கான பிரதான காரணமாக போதைவஸ்துப் பாவனையே என பொதுமக்கள் பலராலும் பேசப்படுகின்றது மேலும் இது நோன்பு காலம் என்பதனாலும் ஊரடங்கு காலம் என்பதனாலும் இப்பிராந்தியங்கள் வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் காணப்படுகின்றனர் எனவே பொலிஸார் இரவு வேளைகளிள் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபட்டு இக்களவுகளை முற்றாக இல்லாமல் செய்து தருமாறு அக்கரைப்பற்று பொலிசாரை பொதுமக்கள் கேட்கின்றர்

Advertisement