கரைவலை மீன்பிடி தொழில் பாதிப்பு

பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில்   கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

பெரியநீலாவணை-மருதமுனை-கல்முனை உள்ளிட்ட பிரதேசங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடல்மட்ட வேறுபாடும் கடல்கொந்தளிப்பின் அதிகரித்த நிலையுமே இதற்கான காரணங்களாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடல்நீரானது கலைவலை தோணிகளை நிறுத்தி வைக்கும் இடங்களைக் காவு கொண்டுள்ளதுடன்  மணல் பகுதிகளையும் அதிகமாக உள்ளே  இழுப்பதன் காரணங்களாலும் தோணிகளைத் தள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.கரைவலை இழுவை மீன்கள் பிடிக்கப்படாததன் காரணமாக மீனின் விலையும் இப்பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படுகிறது

 கடல் கொந்தளிப்பு    இப்பிரதேசங்களிலிருந்து படிப்படியாக அதிகரித்து காரைதீவு- நிந்தவூர்- ஒலுவில்-பொத்துவில் பிரதேச கரைவலையினையும் பாதிக்கக் கூடிய வாயப்பிருப்பதாகக் கூறப்படுகிறது


Advertisement