அக்கரைப்பற்று மாநகர சபையின் அவதானத்திற்கு!



எஸ்.எம்.,இர்சாத்.
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பெரிய மரவெட்டுவான்
குளத்துக்கு அருகாமையில் அக்கரைப்பற்று மாநகர சபையினால் அள்ளப்படு;ம் குப்பைகள் அங்கு
கொண்டு சென்று கொட்டப்படுவதனால் துர்நாற்றம் வீசுகின்றது.

 அதனைச் சூழவுள்ள அரச நிறுவனங்களான தேசிய நீர் வழங்கல் பிரதான காரியாலயம் மற்றும் ஸ்ரீ லங்கா
ரெலிகொம்  சமுர்த்தி வங்கிக் காரியாலயம் மற்றும் பிரதேச செயலகம் என்பன
காணப்படுகின்றன. 

குறித்த நிறுவனங்களில் கடமை புரியும் அதிகாரிகளும் மற்றும் நாள்தோறும்;
தங்கள் பணிகளுக்காகச செல்லும் மக்களும் பெரும் அசௌகரீகங்களுக்கு உள்ளாகின்றனர்.
அதுமாத்திரமல்ல ,அதனால் டெங்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது.

எனவே , அக்கரைப்பற்று மாநகர சபையானது துப்பரவு செய்வதோடு தொடர்ந்தும் ,அங்கு
குப்பைகளை கொட்டாமலிருக்கவேண்டும் எனவும் பொது மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.