”ஊடகவியலாளரின் மடிக் கணிணி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது”

வீட்டுக்கு வந்த சிஐடியினர் தன்னுடைய மடிக்கணினியை கைப்பற்றிச் சென்றனர் என்று சண்டே ஒப்ஸசேவர்,ஊமுன்னாள் ஆசிரியரும் கொழும்பு செய்தியாளருமான (@tingilye) தமது ருவிற்றர் பக்கத்தில் தரிசா பஸ்தியன் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.

முன்னர் நீதிமன்றின் அனுமதியின்றி எனது தொலைபேசி உரையாடல் பதிவுகளை சிஐடியினர் பெற்றுக்கொண்டிருந்தனர். அவற்றை அவர்கள் வௌியிட்டுமிருந்தனர். ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் எனது தொலைபேசி உரையாடல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டமை தொடர்பாக அதிர்ச்சியடைந்தேன்" - 

எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். இருப்பினும், எனது மடிக்கணினியின் ஹார்வெயார், சொப்ட்வெயார், தரவுகள், தகவல்களை பயன்படுத்தக்கூடும் என்று கவலை கொண்டுள்ளேன்"  என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement