சிரமதான வேலைத்திட்டம்

(க.கிஷாந்தன்)

 

கொத்மலை பொலிஸாரின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம் இன்று (18.06.2020) கொத்மலை, நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

 

டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த ஹோட்டல்கள், வர்த்தக நிலையங்கள் உட்பட மேலும் சில நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அவற்றை உடனடியாக சுத்தப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், இறுதி எச்சரிக்கைக்கான அறிவித்தலும் சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்பட்டது.

 

பஸ் தரிப்பிடம் உட்பட நகரத்தில் டெங்குநோய் பரவக்கூடிய வகையில் இருந்த இடங்கள் இந்த டெங்கு ஒழிப்பு சரமதான பணி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. பொலிஸார், இராணுவத்தினர், கிராம அதிகாரி, பிரதேச சபை ஊழியர்கள் உட்பட பலர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.Advertisement