உபகரணங்கள் வழங்கி வைப்பு

வி.சுகிர்தகுமார்
  

பாடசாலைகளுக்கு தேவையான கைகழுவும் பாத்திரங்களை தனியார் தொண்டு நிறுவனங்களும் அமைப்புக்களும் வழங்கி வருகின்றது.

இதற்கமைவாக அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க சபையானது ஆலையடிவேம்பில் உள்ள இரு பாடசாலைகளுக்கு தேவையான காலால் செயற்படுத்தும் கைகழுவும் பாத்திரங்களை இன்று வழங்கி வைத்தது.

நல்லிணக்க சபையின் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கான தலைவர் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சமய நல்லிணக்க சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலயம் மற்றும் திருவள்ளுவர் வித்தியாலய அதிபர்கள் பங்கு கொண்டு கைகழுவும் பாத்திரங்களை பெற்றுக்கொண்டனர்.Advertisement