பாடசாலைகள் மீள ஆரம்பித்தன

 

tp.Rfph;jFkhh;         


  கொரோனா அச்சுறுத்தலின் பிற்பாடு நாடளாவிய ரீதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கனிஷ்ட பாடசாலைகள் உள்ளிட்ட சகல பாடசாலைகளும் ஆறு மாத காலத்தின் பின்னர் இன்று திறக்கப்பட்டு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கமைவாக இன்று 200 மாணவர்களுக்குட்பட்ட கனிஷ்ட வித்தியாலயங்களில் சகல வகுப்பு  மாணவர்களும் வருகை தந்ததுடன் கற்றல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டன.

அம்பாரை மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்திலும் இன்று கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றதுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகமளித்ததை காண முடிந்தது.

பாடசாலைக்குள் உள்நுழையும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியதுடன் கைகளுவும் செயற்பாடுகள் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றினர்.

பாடசாலை வகுப்பறைகளிலும் சமூக இடைவெளியினை பின்பற்றி ஆசனங்கள் போடப்பட்டிருந்ததுடன் மாணவர்களும் அதிபர் ஆசிரியர்களின் ஆலோசனையினை பின்பற்றி செயற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

இதேநேரம் பெற்றோர்கள் பாடசாலை கல்வி சமூகத்துடன் இணைந்து நேற்றைய தினம் பாடசாலைகளில் சிரமதான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement