வரவேற்கும் தலைவர்கள், அதிகரிக்கும் விமர்சனங்கள்



பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை அக்கட்சியின் கொண்டாடி வருகின்றனர்.

தீர்ப்பு வெளிவந்தவுடன் அறிக்கை மூலம் தமது உணர்வை வெளிப்படுத்திய எல்.கே. அத்வானி, லக்னெள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய குறிப்பிடத்தக்க தீர்ப்பை நெஞ்சார்ந்து வரவேற்கிறேன். ராம ஜென்ம பூமி இயக்கம் மீது நானும் பாரதிய ஜனதா கட்சியும் கொண்டிருந்த ஈடுபாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது என்று கூறினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் கனவை நனவாக்க வழிவகுத்த உச்ச நீதிமன்றத்தின் கடந்த ஆண்டு நவம்பர் மாத தீர்ப்பைத் தொடர்ந்து மற்றொரு வரலாற்றுப்பூர்வ தீர்ப்பாக சிபிஐ நீதிமன்ற முடிவு அமைந்துள்ளதை ஆசிர்வதிக்கப்பட்ட நிகழ்வாக நான் கருதுகிறேன். அயோத்தியில் அழகிய ராமர் கோயில் கட்ட முடிக்கப்படும் நாளை எதிர்நோக்கும் கோடிக்கணக்கான எனது நாட்டவர்களுடன் நானும் அந்த அழகிய ஆலயத்தின் துவக்க நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று அத்வானி கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தமது வீட்டுக்கு வந்திருந்த கட்சித் தலைவர்கள், செய்தியாளர்கள் உள்பட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி அத்வானி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அத்வானி

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முரளி மனோகர் ஜோஷி, "சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுப்பூர்வமானது. 1992, டிசம்பர் 6ஆம் தேதி சம்பவம், சதி அல்ல என்றும் எங்களுடைய ரத யாத்திரையின் திட்டமாக அது இருக்கவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. ராமர் ஆலய கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் இந்த செய்தியை அறிந்து மகிழ்ச்சியடைவார்கள்" என்று தெரிவித்தார்.

இதேபோல, வழக்கின் தீர்ப்பை ஆதரித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, "பாஜக தலைவர்கள் மீதும், சாதுக்கள் மீதும் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பொய் வழக்குகள் புனைந்தது, தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக பொய் வழக்குகள் போட்டதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

ஒவைஸி

கொந்தளிக்கும் ஒவைஸி

தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்.பியுமான அசாதுதீன் ஒவைஸி, "இந்திய நீதித்துறை வரலாற்றில் இது ஒரு கறுப்பு நாள். இப்போது நீதிமன்றம் அந்த சம்பவத்தில் சதி நடக்கவில்லை என்று கூறியிருக்கிறது. தற்செயலாக அது நடக்கவில்லை என கூற இவ்வளவு நாள் ஆகுமா என எனக்கு தெளிவுபடுத்துங்கள்" என்று கூறினார்.

"இது சட்டம் தொடர்புடைய பிரச்சனை. பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஒரு பிரச்சனை. ஆனால் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக அவர்கள் உள்துறை அமைச்சராகவும், மனித வளத்துறை அமைச்சர்களாகவும் ஆக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டனர். ஏனென்றால் ஆட்சியில் இருப்பது பாரதிய ஜனதா கட்சி" என்று ஒவைஸி தெரிவித்தார்.



 அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992ஆம் ஆண்டில் இடிக்கப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்படுவதாக லக்னௌ நகரில் உள்ள சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பரவலாக வரவேற்பும் விமர்சனமும் காணப்படுகிறது.

இந்த தீர்ப்பு புதன்கிழமை வெளிவந்தவுடனேயே இந்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

    இது தொடர்பாக அத்வானி பகிர்ந்துள்ள காணொளியில், இந்த தீர்ப்பு முக்கியமானது. இது எங்கள் அனைவருக்கும் சந்தோஷமான தருணம்,” என குறிப்பிட்டுள்ளார்.

    "ஜெய் ஶ்ரீராம்" என்று கூறி இந்த தீர்ப்பை அவர் வரவேற்றார்.

    இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான ராஜ்நாத் சிங், "பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் சதி இல்லை என்று வெளிவந்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். நீதி வெல்லும் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அது தாமதமாக வந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

    Twitter பதிவை கடந்து செல்ல, 1

    Twitter பதிவின் முடிவு, 1

    காங்கிரஸ் அதிருப்தி

    பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சூர்ஜிவாலா செய்தியாளர்களிடம் பேசும்போது, தமது கட்சியின் அதிருப்தியை பதிவு செய்தார்.

    "உச்ச நீதிமன்றம் கடந் ஆண்டு அளித்த தீர்ப்பில், மசூதி இடிக்கப்பட்ட செயலை தெளிவான சட்டவிரோத செயல் என்று கூறியது. ஆனால், சிபிஐ நீதிமன்றம், அந்த செயலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்புடைய கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களை சதியில் தொடர்பில்லாதவர்கள் எனக்கூறி விடுதலை செய்திருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த தேசமும், பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ்-ம் இணைந்து நடத்திய ஆணி வேர் போன்ற அரசியல் சதியின் வடிவத்தை பார்த்தது" என்று அவர் கூறினார்.

    இந்திய அரசியலமைப்ப மீது ஒவ்வொரு இந்தியரும் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில், மத்திய அரசும், உத்தர பிரதசே அரசும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று ரந்தீப் சூர்ஜீவாலா தெரிவித்தார்.

    "மறக்கப்பட வேண்டிய சம்பவம்''

    இந்த தீர்ப்பு குறித்து சிவேசனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளட் கூறுகையில், "அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோரை விடுதலை செய்த தீர்ப்பை வரவேற்கிறேன். அந்த சம்பவம் சதியால் விளைந்தது அல்ல, சந்தர்ப்ப சூழலால் நடந்தது என்பதை நீதிமன்றம் கூறியிருக்கிறது. அது மறக்கப்பட வேண்டிய சம்பவம். பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காவிட்டால், அயோத்தியில் நாம் ராம் ஜென்ம பூமி நடந்ததை பார்த்திருக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.

    இந்த தீர்ப்பு தொடர்பாக டிவிட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “அங்கு மசூதியே இல்லை. புதிய இந்தியாவின் நீதி,” என குறிப்பிட்டுள்ளார்.

    Twitter பதிவை கடந்து செல்ல, 2

    Twitter பதிவின் முடிவு, 2

    பாலிவுட் திரைப்பட இயக்குநர் ஹன்சல் மேத்தா, “பாப்ரி மசூதி இடிப்பு கடவுளின் செயல்,” என கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

    Twitter பதிவை கடந்து செல்ல, 3

    Twitter பதிவின் முடிவு, 3

    பிரபல கட்டுரையாளர் ஹரிந்தர் பவேஜா பகிர்ந்துள்ள ட்வீட்டில், “பாபர் மசூதி இடிப்பை உச்சநீதிமன்றம் கிரிமினல் குற்றம் என்றது. இன்று சிறப்பு நீதிமன்றம் இதனை தன்னிச்சையான செயல் என்கிறது. ஏன் இதற்கு 28 ஆண்டுகள் தேவைப்பட்டன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

    Twitter பதிவை கடந்து செல்ல, 4

    Twitter பதிவின் முடிவு, 4

    Twitter பதிவை கடந்து செல்ல, 5

    Twitter பதிவின் முடிவு, 5

    அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், “ஏராளமான மக்கள் பார்க்க பாபர் மசூதி இடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரும் அதில் குற்றவாளி இல்லையா?,” என ட்வீட் செய்துள்ளார்.

    Twitter பதிவை கடந்து செல்ல, 6

    Twitter பதிவின் முடிவு, 6

    எழுத்தாளர் மீனா கந்தசாமி, “இந்திய நீதித்துறை மனுதர்மத்தை ஆதரிக்கிறதா?,” என ட்வீட்டில் குறிப்பிட்டு உள்ளார்.

    Twitter பதிவை கடந்து செல்ல, 7

    Twitter பதிவின் முடிவு, 7

    அரசியல் எழுத்தாளர் சபா நக்வி, “புதிய இந்தியா: சமகால வரலாற்றில் மக்கள் பார்வையில் நடந்த குற்றச் செயலில் யாரும் தண்டிக்கப்படவில்லை,” என குறிப்பிட்டுள்ளார்.