ஜில்லுடன், சில்லென்று ஒரு காதலாக, வாக்களித்தார்


வாஷிங்டன்: 

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இன்று ஓட்டு போட்டு உள்ளார்.

நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏர்லி ஓட்டிங் முறையில் இன்று ஜோ பைடன் தனது வாக்கை பதிவு செய்தார்.

Democratic presidential candidate Joe Biden casts a vote for us presidential election குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் ஆகியோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் களத்தில் உள்ளனர்.

இதில் ஏற்கனவே டொனால்ட் ட்ரம்ப் வாக்களித்த நிலையில் ஜோ பைடன் தனது சொந்த மாகாணமான டெலாவரேயில், இன்று ஓட்டுப் போட்டார். அப்போது அவர் மனைவி ஜில் உடன் வந்திருந்தார். இருவரும் கோட் அணிந்திருந்தனர். முகக் கவசங்களும் அணிந்தபடி வந்திருந்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், "நல்லது.. நாங்கள் இப்போதுதான் ஓட்டுப் போட்டோம்" என்று தெரிவித்தார்.

ஃப்ளோரிடா மாகாணத்தில் அக்டோபர் 24ஆம் தேதி டொனால்ட் ட்ரம்ப் வாக்களித்திருந்தார். நியூயார்க் மகாணம்தான் டொனால்ட் ட்ரம்ப் முதலில் குடியிருந்த ஊர். பிறகு அவர் ஃபுளோரிடாவிற்கு மாறினார். அதுவும் அதிபரான பிறகுதான், 2019 ஆம் ஆண்டில் குடிபெயர்ந்தார்.

Democratic presidential candidate Joe Biden casts a vote for us presidential election

நான் டிரம்ப் என்பவருக்கு ஓட்டு போட்டேன் என்று தனது பேட்டியின்போது நகைச்சுவையாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

.Advertisement