அடல் சுரங்கப்பாதை


 


இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகிலேயே உயரமான இடத்தில் இருக்கும் அடல் சுரங்கப்பாதையின் பயன்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடங்கி வைத்துள்ளார்.


இமய மலையின் பிர் பாஞ்சால் தொடரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கும் முக்கியமானது.


3,300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இது சீனாவுடன் போர் மேகம் சூழ்ந்துள்ள பகுதிக்கு அருகே வசிக்கும் உள்ளூர் மக்களுக்கும் உண்மையாகவே உதவியாக இருக்குமா?


முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயியை 1998ஆம் ஆண்டு சந்திக்கச் சென்றதை தற்போது 83 வயதாகும் வரலாற்று ஆய்வாளர் ஷெரிங் டோர்ஜீ பசுமையுடன் நினைவு கூர்கிறார்.


1998இல் இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள லஹௌலில் இருந்து வாஜ்பேயியை சந்திக்கச் சென்ற மூவர் குழுவில் இவரும் ஒருவர்.


இந்திய - சீன எல்லை பதற்றம் நடக்கும் லடாக்கின் வரலாறு என்ன?

இந்திய- சீன எல்லை மோதல்: ரஷ்யா யார் பக்கம் நிற்கும்?

நாங்கள் வாஜ்பேயியை சந்திக்கச் சென்றபோது எங்களுடைய முக்கிய கோரிக்கையாக இந்த சுரங்கப்பாதை இருந்தது. ஆண்டுக்கு 6 மாத காலம் தகவல் வெளியில் விட தொடர்பில்லாமல் இருப்பதால் எங்களுக்கு நிவாரண உதவி வேண்டும் என்றும் அவரிடம் கேட்டோம். ஆண்டு முழுவதும் சாலைப் போக்குவரத்து பயன்படுத்தக்கூடிய இந்த சுரங்கப் பாதையை அமைக்குமாறு முன்னாள் பிரதமரிடம் கூறியதை குள்ளுவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக நினைவு கூர்கிறார் ஷெரிங் டோர்ஜீ .


அதிக பனிப் பொழிவு காரணமாக ரோட்டாங் கணவாய் ஆண்டுக்கு 5 மாத காலம் குளிர் காலத்தில் மூடப்படுவதால் இமாச்சல பிரதேசத்தில் உள்ள லஹௌல் பள்ளத்தாக்கு வெளியுலகுடன் அதிக போக்குவரத்து தொடர்பு எதுவும் இல்லாமல் இருக்கும்.


மணாலி வாஜ்பேயிக்கு எந்தளவு பிடிக்கும் என்பது மிகவும் அறியப்பட்டது. மணாலி மற்றும் லே இடையேயான சுரங்கப்பாதை திட்டத்தை 2000மாவது ஆண்டு அவர் அறிவித்தார்.


இதற்கு முன்பு ரோட்டாங் சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டிருந்த அந்த சுரங்கப்பாதை 2019ஆம் ஆண்டு நரேந்திர மோதி அரசால் அட்டல் சுரங்கப்பாதை என்று முன்னாள் பிரதமர் நினைவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


டோர்ஜீ சென்ற குழுவில் இருந்த இன்னொரு நபர் மறைந்த தார்ஜீ தாவா ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த காலத்தில் இருந்தே அவருக்கு நண்பர். வாஜ்பேயியை டெல்லியில் செல்ல சென்று சந்திக்கும் குழுவுக்கு தலைமை விதிக்குமாறு தாவாவிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம் அவர் அதற்கு ஒப்புக் கொண்டார் என்று டோர்ஜி கூறுகிறார்.


வாஜ்பேயிடம் இந்த சுரங்க திட்டம் குறித்து நாங்கள் ஆயிரத்து 1998 ஆண்டு கூறிய பொழுது அதற்கு முன்னதாகவே இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்க வேண்டும் அவர் கூறினார்.


1999ஆம் ஆண்டு கார்கில் போர் முடிந்த பின்பு மீண்டும் நாங்கள் சந்தித்தோம்.


லே உடன் இந்த சுரங்கப் பாதைகள் இணைக்கப்படுவது ஏன் முக்கியம் என்பதை கார்கில் போருக்கு பின்பு அவர் உணர்ந்தார். அதன்பின்பு வாஜ்பேயி உடனடியாக இந்த சுரங்கப்பாதை அமைக்க ஒப்புக் கொண்டார் என்று தெரிவிக்கிறார்.


அடல் சுரங்கப்பாதை தான் உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப் பாதை ஆகும்.


ஒன்பது கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை மணாலி - லே இடையேயான வாகன போக்குவரத்து, ஆண்டுதோறும் நடக்க உதவி செய்யும் என்று எல்லை சாலைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


Atal tunnel

பட மூலாதாரம்,MONEY SHARMA/GETTY IMAGES

இதுமட்டுமல்லாமல் மணாலி மற்றும் லே இடையேயான பயண தூரத்தை 46 கிலோ மீட்டரும் பயண நேரத்தை 4 முதல் 5 மணி நேரமும் இதன் மூலம் குறையும்.


சமீபத்தில் இந்திய மற்றும் சீனப் ராணுவத்தினர் இடையே நடந்த மோதல் காரணமாக லே பகுதியில் போர் மேகம் சூழ்ந்து உள்ளது.


இந்த சுரங்க பாதை பயன்பாட்டுக்கு வருவது அங்கிருக்கும் உள்ளூர் மக்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.


இந்த சுரங்கப்பாதையால் போக்குவரத்தில் 96 கிலோ மீட்டர் குறையும். எங்களுக்கான பயணக்கட்டணமும் குறைவாகும் என்று லேயிலுள்ள சி.எஸ் ரத்தோர் எனும் வியாபாரி கூறுகிறார்.


ஆனால் லேவில் உள்ள இன்னொரு வியாபாரி ஸ்டாண்சின் ஃபேன்டோக் இந்த சுரங்கப்பாதை உள்ளூர்வாசிகள் பயன்பாட்டுக்கு எந்தளவுக்கு அனுமதிக்கப்படும் என்பது குறித்து சந்தேகம் தெரிவிக்கிறார்.


இந்தியா - சீனா: எல்லையில் பலசாலியாகப் போட்டியிடுவது ஏன்?

சீனாவுடன் இந்தியா நட்புடன் இருக்க முயன்றும் நடக்காதது ஏன்?

அடுத்த ஆண்டு சுற்றுலா சீசன் தொடங்கும் பொழுது எங்களுக்கு எந்த அளவுக்கு இது பயனளிக்கும் என்பதை கூற முடியும். இந்த சுரங்கப்பாதை ஒருவேளை பயன்பாட்டுக்கு வந்தாலும் பாரலாச்சா கணவாய் வழியாக செல்வது எங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.


கடந்தாண்டு எங்களுடைய சரக்கு வாகனங்கள் சில பாரலாச்சா கணவாயில் சிக்கிக் கொண்டன.


அவற்றை திரும்ப மீட்பதற்கு 5 முதல் 6 மாத காலம் ஆனது.அது எங்களுக்கு கடுமையான இழப்பை உண்டாக்கும் என்று அவர் கூறுகிறார்.


லே லடாக் பகுதி மக்களின் துயரம் முழுவதையும் இந்த அடல் கணவாய் நீக்கிவிடும் என்பது குறித்து சந்தேகம் எழுப்புவது ஃபேன்டோக் மட்டுமல்ல.


லடாக் தன்னாட்சி மழை மேம்பாட்டுக் கவுன்சிலின் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ரிக்ஜின் ஸ்பால்பார் என்பவரும் சந்தேகம் தெரிவிக்கிறார்.


Atal tunnel

பட மூலாதாரம்,RIGZIN SPALBAR

படக்குறிப்பு,

ரிக்ஜின் ஸ்பால்பார்


அடல் சுரங்கப்பாதையில் லடாக் மக்களுக்கு அதிக உதவி இருக்காது. ஒருவகையில் இது எங்களது பயண தூரத்தை குறைக்கும் என்பது உண்மைதான். ஆனால் பாரலாச்சா லா, தாங்லாங் லா, லாச்சுங் லா, செர்ச்சு லா போன்ற பிற கணவாய்கள் பனிக்காலத்தில் முழுமையாக மூடப்பட்டிருக்கும்.


இந்த கணவாய்கள் அனைத்தும் லே - லடாக் பகுதியை அடல் சுரங்கப்பாதையுடன் இணைகின்றன அங்கிருந்துதான் அவர்கள் மணாலி செல்ல முடியும்.


மேற்கண்ட கணவாய்கள் அனைத்தும் குளிர்காலத்தில் மூடப்பட்டிருந்தால் லடாக் மக்களால் அடல் சுரங்க பாதைக்கு செல்ல முடியாது.


லடாக் மக்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்ல அடல் சுரங்கப் பாதைக்கு லே பகுதிக்கும் கும் இடையே இருக்கும் இந்த கணவாய்களில் ஆண்டு முழுவதும் பயன்படுத்த கூடிய வகையில் மேலதிக சுரங்கப் பாதைகள் அமைக்கப் பட வேண்டும் என்று இந்திய ராணுவம் தெரிவிக்கிறது.


ரோட்டாங் லா கணவாய் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. அங்கு சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது பல உயிர் சேதங்களை தடுக்கும். ஆனால் லடாக் மக்களுக்கு மிகவும் முக்கியமானது அல்ல. பாரலாச்சா லா, தாங்லாங் லா, லாச்சுங் லா ஆகியவைகளே அவர்கள் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியம் என்கிறார் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற கர்னல் லோப்ஜாங் நீமா.

லோப்ஜாங் நீமா


அடல் சுரங்கப்பாதையின் தெற்கு நுழைவாயில் மணாலி நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது அமைந்திருக்கும் உயரம் 3060 மீட்டர்.


இந்த சுரங்கப் பாதையின் வடக்கு நுழைவாயில் லஹௌல் பள்ளத்தாக்கில் உள்ள தெலிங் எனும் கிராமத்தின் அருகே அமைந்துள்ளது.


இந்த இடத்தில் உயரம் 3071 மீட்டர். இந்த சுரங்கப் பாதையில் தங்கள் பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகும் என்று லஹௌல் பள்ளத்தாக்கு மக்கள் நம்புகிறார்கள்.


இதன் மூலம் புதிய வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புக்கள் பெருகும் என்பது அவர்கள் நம்பிக்கை.


ட்ரைபல் டுடே எனும் இதழின் ஆசிரியர் சாம் சந்த் ஆசாத் ஆண்டுதோறும் இல்லாவிட்டாலும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் பத்து மாதம் இந்த சுரங்கப்பாதையால் தங்களுக்கு பலன் கிடைக்கும் என்று பிபிசியிடம் கூறுகிறார்.


Atal tunnel

வரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த காலகட்டத்தில் இந்த சுரங்கப் பாதையும் மூடப்பட்டு இருக்கும் என்பது அவரது கருத்து.


இதுமட்டுமல்லாமல் வெளியுலகத்துடன் அதிக தொடர்பு ஏற்படுவதால் தங்களது நில மற்றும் கலாசார அடையாளங்களில் தாக்கம் ஏற்படும் என்று அப்பகுதியில் அச்சமும் ஏற்பட்டுள்ளது.


இந்த திட்டம் ஆறு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு 10 ஆண்டுகள் ஆனது என்கிறார் இத்திட்டத்தின் தலைமை பொறியாளர்.