மும்பை தாக்குதல் நடைபெற்று 11 ஆண்டுகள்


 


2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல் உட்பட முக்கியமான இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடந்து இன்றோடு (நவம்பர் 26) 11 ஆண்டுகள் நிறைவடைகிறது.

மிகவும் மோசமான இந்த தாக்குதல் குறித்த 10 முக்கிய தகவல்கள் இவை.

1. 2008ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதியன்று இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல், இந்திய வரலாற்றில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

26/11 மும்பை தாக்குதல்

2. இந்த தாக்குதலை நடத்த பாகிஸ்தானை சேர்ந்ததாக கூறப்படும் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள், கடல் வழியாக வந்து, முதலில் சிறு குழுக்களாக பிரிந்தனர். வாகனங்களை கடத்திய அவர்கள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்,மும்பையின் புகழ்பெற்ற தாஜ் ஹோட்டல், ஒபராய் டிரைடண்ட் ஹோட்டல், யூத கலாசார மையம் மற்றும் மருத்துவமனைகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தினர்.

3. மும்பை நகரத்தை 60 மணி நேர முற்றுகையிட்டதில், 166 பேர் உயிரிழந்தனர். அதோடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவிலும் சிக்கல் ஏற்பட்டது.

மும்பை தாக்குதல்

4. இந்த தாக்குதலில் கையெறி குண்டுகளும் தானியங்கி துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன.

    5. இந்தியா இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா அமைப்பு மீது குற்றம் சுமத்தியது. இதனை முதலில் பாகிஸ்தான் மறுத்தது அதன்பின் இந்த தாக்குதலுக்கான திட்டம் பகுதியளவில் தங்களது நாட்டில் வகுக்கப்பட்டதாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான், பின் அஜ்மல் தங்களது குடிமகன் என்று பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது.

    மும்பை தாக்குதல்

    6. பயங்கரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே, கூடுதல் போலீஸ் ஆணையர் அஷோக் காம்தே, மூத்த போலிஸ் அதிகாரி விஜய் சலாஸ்கர், ஆகியோர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திற்கு சென்று தாக்குதல் நடத்திய என் எஸ் ஜி கமாண்டோ படையை சேர்ந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் உயிரிழந்தார்.

    7. 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக, 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்.

    8. தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகளில் உயிர் பிழைத்த ஒரே நபர் அஜ்மல்.

    மும்பை தாக்குதல்: நிருபர்களை விரட்டிய கசாப் கிராமத்தினர்

    9. கசாப்பை தவிர தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது பேரையும் பாதுகாப்பு படையினர் கொன்றுவிட்டனர்.

    10. 60 மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலை இந்திய ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பின, அதனால் அதுதொடர்பாக ஊடக நெறிமுறைகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டன.