நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில்ஒரு பகுதி மூடப்பட்டது


நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் ஏழு பேருக்கு கொரோனா 
ஒரு வீட்டில் நால்வர்: அயல் வீட்டில் மூவர் 
கடற்கரை தெருவின் ஒரு பகுதி மூடப்பட்டது

நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் உள்ள ஒழுங்கை ஒன்றில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை   வியாழக்கிழமை (19) மாலை அவர்கள் அனைவரும் வைத்தியாலைக்கு கொண்டு சென்றதாக நீர்கொழும்பு பிரதான பொது சுகாதார பரிசோதகர் குணரத்ன தெரிவித்தார். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரும் அயல் வீட்டைச் சேர்ந்த மூன்று பேருமே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாவர். இவர்கள் கடற்றொழில் செய்பவர்களாவர். 

இதனை அடுத்து கடற்கரை தெருவில் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது .பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மக்கள் வெளியே செல்லவோ உட்செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவில் இதுவரை  217 கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். Advertisement