வேகத்தால் வந்த வினை


 ஓமானிலிருந்து வருகை தந்த பிரயாணிகளுடன் பயணித்த அதிசொகுசு பஸ் வண்டி ஒன்று இன்று காலை 9.45 அளவில் யாழ்ப்பாணம் பளை நகரில் விபத்துக்குள்ளானது.

பேருந்து சாரதி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்விய 254 பேர் தனிமைப்படுத்தலுக்காக விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 11 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.


Advertisement