மாவீரர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு


 


அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை   இன்று(27) இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


குறிப்பாக கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்திய முகாம் ,அக்கரைப்பற்று ,திருக்கோவில், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொது இடங்கள் முக்கிய சந்திகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்ட்டுள்ளதுடன் வீதி ரோந்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே வேளை அக்கரைப்பற்று சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட பகுதியில் நேற்று 31 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில்   மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து கல்முனை பிராந்தியத்தில் நாவிதன்வெளி சுகாதார   வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் கொழும்பில் இருந்து நாவிதன்வெளி அன்னமலைக்கு வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று  அடையாளம் காணப்பட்டதை தொடரந்து அப்பகுதியிலும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Thanks & Best Regards,

FAROOK SIHAN(SSHASSAN)-Journalist-මාධ්‍යවේදී
B. F .A (Hons)Diploma-in-journalism(University ofJaffna)
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
0779008012-(URGENT)
sihanfarook@yahoo.com, sihanfarook@gmail.com,sihanfarook@hotmail.com
0719219055,0712320725,0754548445