மலையகப் பிரதேசங்களில் 25 புதிய கொரொனா தொற்றாளர்கள்


 


(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ, மஸ்கெலியா, கொட்டகலை, லிந்துலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 26.12.2020 அன்று மாலை வெளியாகிய அறிக்கையின் படி 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 10 பேருக்கும், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 03 பேருக்கும், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 09 பேருக்கும், லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 03 பேருக்குமாக மொத்தமாக 25 பேருக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளது.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிந்த டிக்கோயா இன்ஜஸ்ட்ரி தோட்டப்பகுதியில் வசிக்கும் 5 பேருக்கும், நோர்வூட் வெஞ்சர் கீழ்பிரிவு தோட்டப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 8 மற்றும் தரம் 10 ஆகிய வகுப்புகளில் கல்வி கற்ற இரண்டு மாணவர்களுக்கும், நோர்வூட் போட்றி தோட்டத்தில் ஒருவருக்கும், டிக்கோயா பட்டல்கல தோட்டப்பகுதியில் உள்ள ஒருவருக்குமாக மொத்தம் 10 பேர் இணங்காணப்பட்டுள்ளனர்.

தலவாகலை கூமூட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் சிசு உட்பட 35 வயதுடைய பெண் ஒருவர், 20 வயதுடைய இளைஞன் ஒருவருமாக மூவரும், தலவாகலை ஒலிரூட் தோட்டத்தில் 56 வயது ஆண் ஒருவரும், கொட்டகலை டிரைட்டன் கே.ஒ பிரிவில் 59 வயது பெண் ஒருவர், டிரைட்டன் டீ.டி பிரிவில் 20 வயது பெண் ஒருவர், டெரிகிளேயர் தோட்டத்தில் 37 வயதுடைய ஆண் ஒருவரும், வட்டகொடை பகுதியில் இருவருமாக ஒன்பது  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, சாமிமலை கவரவில தோட்டப்பகுதியில் ஆண் ஒருவர், பெண் ஒருவருமாக இருவரும், சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்டத்தில் பெண் ஒருவருமாக மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லிந்துலை பகுதியில் ஒருவரும், லிந்துலை வோல்ட்றீம் தோட்டப்பகுதியில் ஒருவரும், நாகசேனை வலகா தோட்டப்பகுதியில் ஒருவருமாக மூவர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும், குடும்ப உறுப்பினர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.