முறுகல்

 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)காரைதீவு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட மாளிகைக்காடு  ஒரு பகுதியில்  பிரதான வீதியில்  கட்டிடத்தின் ஒரு பகுதியில்   சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பகுதி ஒன்று  வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றும் போது  பதற்ற நிலை ஏற்பட்டது.


 வெள்ளிக்கிழமை(18)  குறித்த கட்டட  காணிக்கு மேலதிகமாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பகுதியில் நிர்மாணம் மேற்கொண்டு இருந்ததுடன் இவற்றை அகற்ற வந்த அதிகார சபை உத்தியோகத்தர்களுக்கு  இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனால் பிரதான வீதியில் பொதுமக்கள்  கூடியதுடன்   சுகாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனை அறிந்து  காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி   ஜீவராணி சிவசுப்பிரமணியம் களத்துக்கு நேரில் வந்து சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை   வலியுறுத்தினார்.

ஆயினும்  கட்டடத்தின் நடத்துநர் அநாகரீக   வார்த்தைகளால் சுகாதார வைத்திய அதிகாரியை திட்டி வெளியேறுமாறு கூறினார்.

இதை அடுத்து ஒரு விதமான பதற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து    பொலிஸ், இராணுவம் ஆகியோர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் சட்டவிரோத நிர்மாணத்தை உடைத்து அகற்றினர்.