கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த #பைடன் என்ன செய்வார்?

 


வாஷிங்டன்: 

டிரம்பின் அலட்சியப் போக்கு காரணமாக அமெரிக்காவில் தற்போது கொரோனா உயிரிழப்பு நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், பைடன் அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதம் இறுதி ஆண்டில் நுழைந்தபோது, அந்நாட்டில் முதல் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், வைரஸ் பரவல் குறித்து மக்கள் கலவைக் கொள்ளத் தேவையில்லை என்றும் அரசு நிலைமையைக் கட்டுக்குள் வைத்துள்ளது என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.

இன்று, டிரம்ப் தனது அதிபர் பதவியில் இறுதி நாளில் உள்ளார். இப்போது அமெரிக்காவில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கோவிட் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டிரம்ப் அரசு காரணம்

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்ததற்கு டிரம்ப் அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்றும் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். டிரம்ப் அரசு ஆரம்பக் காலத்தில் நிலைமையைச் சரியாகக் கையாண்டு இருந்தால் ஆயிரக்கணக்கான மரணங்களைத் தவிர்த்திருக்கலாம் என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தேசிய பேரிடர் மையத்தின் இயக்குநரும் பொதுச் சுகாதார நிபுணருமான டாக்டர் இர்வின் ரெட்லெனர் கூறினார். அரசின் திறமையின்மை மற்றும் நேர்மையின்மை ஆகியவற்றின் விலையை இப்போது கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிக உயிரிழப்பு

கொரோனா காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் கிளீவ்லேண்ட், தம்பா, புளோரிடா ஆகிய மாகாணங்களின் மக்கள் தொகைக்குச் சமம். அதேபோல வெள்ளம், சர்க்கரை நோய் மற்ற தொற்றுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், விரைவில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த அமெரிக்கர்களைவிட அதிக பேரை கொரோனாவால் அமெரிக்க இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.Advertisement