ஒரே சுற்றில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்த அஜித் !

 


அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாய்க்கு வந்துள்ளது. இதற்கிடையில் காசியில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டபின் அஜித் தற்போது பைக்கில் வட இந்தியாவின் பல நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் வரை பைக்கிலேயே பயணம் மேற்கொண்டுள்ளதாக அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தெரிவிக்கிறார். இந்தப் பயணத்தில் தான் மட்டும் செல்லாமல் மேலும் இரு நண்பர்களையும் தனது பாதுகாப்புக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

இவர்களைத் தவிர மேலும் 11 தொழில்முறை பைக் ரைடர்களும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர். அந்தப் பயணம் முடிந்து இன்னும் சில தினங்களில் சென்னை திரும்ப திருக்கிறாராம் அஜித்.Advertisement