அடுத்து என்ன நடக்கும்,மியான்மரில்?

 


``நாட்டின் நிலைமையை ராணுவம் எப்படி பார்க்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்'' என்று அயே மின் தான்ட் கூறுகிறார். ``ஆங் சான் சூச்சி யை `அன்னை' என்று குறிப்பிடுவது சர்வதேச ஊடகத்தினருக்கு பழகிப் போன விஷயம். ராணுவம் தன்னை `தேசத்தின் தந்தை' என்று கருதிக் கொண்டிருக்கிறது'' என்றும் அவர் கூறினார்.


அதன் விளைவாக, ஆட்சி செய்வது என்ற கேள்வி வரும்போது, ``கடமை மற்றும் உரிமை'' என்ற உணர்வாக ராணுவம் பார்க்கிறது. சர்வதேச வர்த்தகத்தில் மியான்மர் திறந்த நிலையுடன் அணுகுவது ராணுவத்திற்குப் பிடித்திருக்காது.


பெருந்தொற்று மற்றும் ரோஹிங்யா மக்களுக்கு வாக்குரிமை மறுப்பு குறித்த சர்வதேச அளவிலான கவலை ஆகியவை காரணமாக, ராணுவம் இப்போது செயல்பட தைரியம் கிடைத்திருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். இவையெல்லாம் இருந்தாலும் இதை ஆச்சர்யத்துடன் தான் பார்க்க வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.


எதிர்காலம் எப்படியானதாக இருக்கும்?

ராணுவத்திற்கு சிறிதளவே ஆதாயம் கிடைக்கும் என்ற நிலையில், ராணுவம் இப்போது ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.


``இப்போதுள்ள அமைப்பு முறை ராணுவத்துக்குப் பெருமளவு பயன் தருவதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தன்னாட்சி விஷயத்தில் ராணுவத்தின் முழு கட்டுப்பாடு இருக்கிறது. வணிக நலன்களில் சர்வதேச முதலீடுகளில் கணிசமான கட்டுப்பாடு வைத்துள்ளது. போர்க் குற்றங்களில் மக்கள் நிர்வாகத்திடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான அம்சங்கள் உள்ளன'' என்று சிங்கப்பூரில் உள்ள ஆசிய ஆராய்ச்சி நிலையத்தின் தேசிய பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் ஜெரார்டு மெக்கர்த்தி பிபிசியிடம் கூறினார்.


``இப்போது அறிவித்துள்ளபடி, ஓராண்டு காலத்துக்கு அதிகாரத்தைப் பறித்துக் கொள்வதால், சீனா அல்லாத சர்வதேச பங்காளர்கள், ராணுவத்தின் வணிக நலன்களுக்கு ஊறு ஏற்படுத்தி, சூச்சி மற்றும் என்.எல்.டி. கட்சியை இன்னொரு பதவிக்காலத்துக்கு ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல மில்லியன் மக்களின் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்வதாக இருக்கும்'' என்கிறார் அவர்.


எதிர்காலத்தில் வரக் கூடிய தேர்தல்களில் யு.எஸ்.டி.பி. கட்சிக்கு அதிக ஆதரவு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புவதாக இருக்கலாம். ஆனால் அதுபோன்ற எதிர்பார்ப்புகள் ``குறிப்பிடத்தக்கதாக'' இருக்குமா என அவர் சந்தேகம் தெரிவித்தார்.


இப்போதைய நடவடிக்கையால் சர்வதேச அளவில் ``தனிமைப்படுத்தப்பட்ட நாடாக'' மியான்மர் மாறும் ஆபத்து மீண்டும் ஏற்பட்டுள்ளது, தாயகத்தில் மக்களின் கோபத்தையும் ராணுவம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பில் ராபர்ட்சன் கூறியுள்ளார்.


``மியான்மர் மக்கள் இதை மௌனமாக ஏற்றுக் கொள்வார்கள் என எனக்குத் தோன்றவில்லை. மீண்டும் ராணுவ ஆட்சிக்குச் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. ராணுவத்தின் பலத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றும் அரணாக சூச்சியை மக்கள் பார்க்கிறார்கள்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.


பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். ஆனால், ``பெரிய போராட்டங்கள் தொடங்கினால், பெரிய நெருக்கடிகளும் ஏற்படும்'' என்றும் அவர் கூறினார்.Advertisement